“சாரல் மழையில் நனையும் பூங்காற்றே” - கீர்த்தி ஷெட்டியின் க்யூட் புகைப்படங்கள் !
சாரல் மழையில் நனையும் அழகிய புகைப்படங்களை நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘உப்பென்னா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ‘வணங்கான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கவிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.
தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜீனி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர விஷால் படம் ஒன்றிலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மழை சாரலில் நனைந்தபடி இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.