முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரியா ?... சர்ச்கைக்கு நடிகை கீர்த்தி ஷெட்டி முற்றுப்புள்ளி !

Krithishetty

முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டதாக வெளியான சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி ஷெட்டி விளக்கமளித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், தி வாரியர், பங்கா ராஜூ, ஷ்யாம் சிங்கா ராய், கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘வணங்கான்’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், கால்ஷீட் பிரச்சனையால் விலகினார். தற்போது ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட சில ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

Krithishetty

இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டதாகவும் சர்ச்சை வெடித்தது. இதற்கு தற்போது பதிலளித்துள்ள கீர்த்தி ஷெட்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ததது உண்மைதான். சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். 

ஆனால் அதை வைத்து என் முகம் ‘உப்பென்னா’ படத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. மேக்கப்பால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அதேபோல் வயது அதிகரிக்கும் போதும் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் என அவர் தெரிவித்தார். 

Share this story