நடிகை குஷ்பூவுக்கு என்ன ஆச்சு ?... அவரே வெளியிட்ட விளக்கம் !
தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக நடிகை குஷ்பூ விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பூ. நடிப்பு, தயாரிப்பு என பன்முக திறமைக்கொண்டு செயல்பட்டு வருகிறார். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து வரும் அவர், சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மீரா’ தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வரும் குஷ்பூ, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இருந்தப்போதிலும் குஷ்பூ, நலம்பெற சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து இன்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், சிறிய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாகவும், தற்போது மீண்டும் இயல்புநிலைக்கு வந்து தினசரி பணிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குஷ்பூவின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

