திடீரென திருமணம் முடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது.
மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பிச்சை’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலே தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதையடுத்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதையே லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரத்தைச் சுற்றி தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் லிஜோமோல் ஜோஸ் திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அருண் ஆண்டனி என்பவருடன் நேற்று கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, லிஜோமோலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

