சஸ்பென்ஸ் ஹாரர் படத்தில் லாஸ்லியா.. புதிய படம் குறித்து முக்கிய அப்டேட்

losliya

 லாஸ்லியா நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ‘ஃப்ரெண்ட்ஷிப்' படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

losliya

இதையடுத்து அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ஹாரர் த்ரில்லர் படம் ஒன்றில் லாஸ்லியா நடிக்கிறார். இந்த படத்தில் பூர்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் முனிஷ்காந்த், அவந்திகா, ஷாஷ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

losliya

ஆக்செஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்த படததை சிஎஸ்கே படத்தை இயக்கிய எஸ்.சத்தியமூர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

losliya

இந்த படம் சீரியஸான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகிறது. வழக்கமான பேய் படம் போன்று இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதல்முறையாக பயோனிக் ஹேண்ட் என்ற முறையை பயன்படுத்தப்படுகிறது. அப்படியென்றால் ஒரு செயற்கையான கை, எவ்விதமாக பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது இந்த படத்தில் காட்டப்படவிருக்கிறது. இந்த படத்திற்காக பாழடைந்த மருத்துவமனை போன்ற செட் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story