மாடர்ன் லுக்கில் லாஸ்லியா... வைரலாகும் புகைப்படங்கள் !

losliya

 நடிகை லாஸ்லியாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

losliya

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் லாஸ்லியா. தொலைக்காட்சி, சின்னத்திரை, சினிமா என மூன்றிலும் படிபடியாக பயணித்து வந்துள்ளார். இலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தோன்றினார். அதில் தனது தனித் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

losliya

சின்னத்திரைக்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த  'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி, தர்ஷன் ஆகியோர் நடித்து முடித்துள்ள படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

losliya

தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாடர்ன் லுக் இருக்கும் புகைப்படங்களை நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

losliya

Share this story