‘லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சை’... யாரையும் தாக்கி பேசவில்லை - நடிகை மாளவிகா விளக்கம் !

malavika

 லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகை மாளவிகா புதிய விளக்கம் அளித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகையான அவர், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்ரமுடன் இணைந்து ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். 

malavika

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அவர், தற்போது ‘கிறிஸ்டி’ என்ற வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மாளவிகா மோகனன்,  கதாநாயகிகளை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் விருப்பமில்லை. ‘லேடி’ என்பது தேவைமில்லை.  கதாநாயகர்களை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைப்பது போல பாலினம் இல்லாமல் நாயகிகளையும் அப்படியே அழைக்கவேண்டும் என்று கூறினார். 

malavika

நடிகைகள் நயன்தாரா, மஞ்சு வாரியர் ஆகியோரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.நயன்தாராவுடன் உள்ள மோதலால் தான் மாளவிகா இந்த கருத்தை சொன்னதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்ததது. இந்த கருத்துக்கு நடிகை மாளவிகா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதில் பெண் நடிகைகளை குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல்லை தான் நான் எனது கருத்தாக சொன்னேன். யாரை பற்றியும் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்லவில்லை. மூத்த நடிகை என்ற முறையில் நயன்தாராவை மதிக்கிறேன். அவருடைய நம்ப முடியாத சினிமா வளர்ச்சியை பார்த்து நான் வியந்துள்ளேன் என்று கூறினார். 

 

 

 

Share this story