‘தங்கலான்’ - க்காக எப்படி மாறிட்டாங்க பாருங்க... மாளவிகாவின் ஸ்லிம் லுக் !
‘தங்கலான்’ படத்திற்காக ஒல்லியான தோற்றத்திற்கு நடிகை மாளவிகா மோகனன் மாறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தனுஷூடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘கிறிஸ்டி’ படம் கலவையான விமர்சனை பெற்றது. தற்போது பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
‘தங்கலான்’ படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தங்கலான் படத்திற்காக உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்திற்கு நடிகை மாளவிகா மோகனன் மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.