உடலை வெறித்தனமாக ஃபிட்டாக்கும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் ஜிம் புகைப்படங்கள் !

malavika mohanan

 ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் பூங்கொடியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

malavika mohanan

அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்‌. பின்னர் தனுஷூடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘கிறிஸ்டி’ படம் கலவையான விமர்சனை பெற்றது. தற்போது பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். 

malavika mohanan

‘தங்கலான்’ படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உடல் நலனில் மிகவும் அக்கறை செலுத்தி வரும் மாளவிகா மோகனன், ஜிம் ஒன்றில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். வெறித்தனமான உடல் கட்டமைப்புடன் மாறி வரும் அவரின் தற்போதைய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 

Share this story