'வேட்டையன்' படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர்
'வேட்டையன்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் மஞ்சு வாரியர் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி,பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
nullActress @ManjuWarrier4 at the VETTAIYAN 🕶️ dubbing session. 🎙️
— Lyca Productions (@LycaProductions) August 28, 2024
Releasing on October 10th in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4… pic.twitter.com/hAkUhiGcUH
படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் இதன் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். மேலும் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோரும் தங்களுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். அந்தவகையில் தற்போது நடிகை மஞ்சு வாரியரும் வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளனர். 'வேட்டையன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.