'தல' ரூட்டை பாலோ செய்யும் 'துணிவு' நடிகை... கெத்தான வீடியோ வைரல் !

manju warrier

மலையாள நடிகை மஞ்சு வாரியர் கெத்தாக பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் ஆக்சன் ஹீரோயினாக அடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

manju warrier

'துணிவு' படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அஜித்துடன் இணைந்து பைக் ஓட்டி வந்தார். இதனால் பைக் மீதான ஆர்வம் அவருக்கு அதிகம் ஏற்பட கேரளாவில் உள்ள பல நகரங்களுக்கு நண்பர்களுடன் இணைந்து பைக் பயணம் செய்து வந்தார்.‌ இதற்கிடையே அவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாத நிலையில் அது சர்ச்சையானதால் ஓட்டுனர் உரிமம் வாங்கி தற்போது பைக்கிலேயே உலா வருகிறார். 

manju warrier

இந்நிலையில் தனது பைக் ஆர்வத்தால் புதிதாக பிஎம்டபிள்யூ பைக் ஒன்றையும் புக் செய்திருந்தார். அந்த பைக் நேற்று ஷோரூமில் டெலிவரி செய்திருந்த நிலையில் அதை எடுத்துக்கொண்டு கெத்தாக ஊர் சுற்றி வருகிறார். இது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது பைக் ஆர்வத்திற்கு காரணம் அஜித் சார் தான் என்று குறிப்பிட்டுள்ளார். 

 


 

Share this story