'எல் 2 எம்புரான்' படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நடிகை மஞ்சு வாரியார்...!

manju warrior

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படத்திற்கான டப்பிங் பணியை நடிகை மஞ்சு வாரியார் தொடங்கி உள்ளார். 

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ்,  சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


-அவர்களது  கதாபாத்திர போஸ்டர்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில்,  'எல் 2 எம்புரான்' படத்திற்கான டப்பிங் பணியை நடிகை மஞ்சு வாரியார் தொடங்கி உள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், பிரியதர்ஷினி ராம் தாஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story