திடீரென இன்ஸ்டா புகைப்படங்களை நீக்கிய மஞ்சிமா... காரணம் என்ன ?

manjima

நடிகை மஞ்சிமா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பழைய புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளார். 

தமிழ் மற்றும் மலையாளத்தில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். தமிழில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

manjima

இதற்கிடையே 'தேவராட்டம்' படத்தில் நடித்தபோது இளம் நடிகர் கௌதம் கார்த்திக் மீது  மஞ்சிமா மோகன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஊடகங்களில் தகவல் பரவி வந்த நிலையில் வரும் நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பழைய புகைப்படங்களை நடிகை மஞ்சிமா நீக்கியுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், இந்த தளம் மக்களுடன் உரையாடுவதற்கு ஏற்ற தளம். இது எந்த அளவிற்கு அழகானதோ, அந்த அளவிற்கு ஆபத்தானது. அதனால் அந்த தளத்தில் இருந்த பழைய புகைப்படங்களை நீக்கியுள்ளேன். தற்போது என்னுடைய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் இருப்பதை தவிர்க்கிறேன். இருப்பினும் விரைவில் புகைப்படம் பதிவிடுவேன் என்று கூறியுள்ளார். 

Share this story