தமிழ் பொண்ணு என்பதால் டார்ச்சர் பண்ணறாங்க.. முதல்வருக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்...
தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். சமீபத்தில் குறிப்பிட்ட இயக்குனர்கள் சிலரை சாதி பெயரை கூறி தரக்குறைவாக பேசி மீண்டும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். அவர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்றும், சினிமாவை விட்டே வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட சாதியினரை தரக்குறைவாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜாராகப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் என்னை போலீசார் கைது செய்யமுடியாது என்று கூறி மீரா மிதுன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை பற்றி தவறாக பேசியவர்கள் மீது இதுவரை எத்தனையோ முறை புகார் கொடுத்துள்ளேன். இதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது என்னை கைது செய்யவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு பிரளயமே வெடித்துள்ளது. எனக்கு பிரச்சனை தரும் அந்த சமூகத்தை சேர்ந்த நபர்களை பற்றி மட்டுமே அந்த வீடியோவில் குற்றச்சாட்டியிருந்தார். என்னை தவறாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். இதை உணர்ந்து பிரதமர் மற்றும் முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல கோரிக்கைகளை அந்த வீடியோவில் வைத்துள்ளார். அதேபோன்று நான் ஒரு தமிழ் நடிகை என்பதால் தான் என் வெற்றியை பொறுக்கமுடியாமல் இப்படி செய்கிறார்கள். மேலும் என்னை கைது செய்ய கடந்த 5 வருடமாக போலீசார் முயற்சி செய்கிறார்கள், அது கனவில்தான் நடக்கும் என்று கூறி மீரா மிதுன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

