சினிமாவிற்கு மீண்டும் பிரேக்.. அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மீன் !
பிரபல நடிகையான மீரா ஜாஸ்மீன் மீண்டும் சினிமாவிற்கு பிரேக் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்து, இளைஞர்கள் மனதைக் கிறங்கடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். ரன், சண்டகோழி படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியவர். விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். 2014-ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர் 10 வருடங்களுக்கு பிறகு ‘மகள்’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் திரையில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் வெளியான ‘விமானம்’ படத்திலும் அவர் நடித்திருந்தார். இதையடுத்து மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்து நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேசிய அவர், மீண்டும் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிப்பேன் என்று கூறினார்.