குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய மேகா ஆகாஷ்... வைரலாகும் புகைப்படங்கள் !

megha akash

குடும்பத்தோடு நடிகை மேகா ஆகாஷ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

megha akash

தென்னிந்திய சினிமாவில் இளம் நாயகியாக இருப்பவர் மேகா ஆகாஷ். ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னரே கவுதம் மேனன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

megha akash

அதன்பிறகு சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, அதர்வாவின் பூமாராங் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.  சமீபத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது  தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

megha akash

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேகா ஆகாஷின் புகைப்படங்களை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்நிலையில் தனது குடும்பத்தினரோடு எளிமையான முறையில் பிறந்தநாளை நடிகை மேகா ஆகாஷ் கொண்டாடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

megha akash

Share this story