அசத்தல் லுக்கில் ‘ஜெயிலர்‘ பட நடிகை.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

mirnaa

 ‘ஜெயிலர்’ படத்தின் நடிகை மிர்னாவின் அசத்தல் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

mirnaa

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் மிர்னா. மலையாளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘பிக் பிரதர்’ படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தார். அதன்பிறகு தெலுங்கில் ‘கிரேஸி பெல்லோ’, ‘உக்ரம்’ போன்ற படங்களில் நடித்தார். 

mirnaa

தமிழில் ஆஹா தமிழில் நேரடியாக வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‘புர்கா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ரசிகர்களால் கொண்டாடும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின் மூலம் மிர்னா சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளார். ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

mirnaa

தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் மிர்னா நடித்து வருகிறார். இந்நிலையில் அசத்தல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை மிர்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

mirnaa

 

 

 

Share this story