டாப் கிளாஸில் இருக்கும் மிருணாளினி.. ரசிக்கும் வைக்கும் புகைப்படங்கள் !
நடிகை மிருணாளினியின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டப்மாஷ் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை மிருணாளினி. தமிழ் சினிமாவின் இளம் நடிகையான இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு ‘சாம்பியன்’, சசிகுமாரின் எம்ஜிஆர் மகன், விஷாலின் ‘எனிமி’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் மிருணாளினி தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வருகிறார்.

க்யூட் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் மிருணாளினி, அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் புதிய வாய்ப்பை பெற போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.




