நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் நீதிமன்றத்தில் ஆஜர்

dhilip

பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள்கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிக்கட்ட விசாரணை இப்போது தொடங்கியுள்ளது.இதையடுத்து நடிகர் திலீப், பல்சர்சுனில் உட்பட இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர். பூட்டிய அறைக்குள் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதிக்கட்ட விசாரணை தொடங்கி இருப்பதால் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Share this story

News Hub