பயிற்சியாளரிடம் குறும்பு செய்யும் நடிகை மிருணாள் தாகூர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நடிகை மிருணாள் தாகூர் தனது பயிற்சியாளரிடம் குறும்பு செய்யும் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் மிருணாள் தாகூர். இவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ‘ஹாய் நானா’, ‘பேமிலி ஸ்டார்’, ‘கல்கி 2898 ஏடி’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து இந்தியில் உருவாகும் ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தனது பயிற்சியாளரிடம் மிருணாள் குறும்பு செய்யும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதில் தன்னுடைய பயிற்சியாளரின் ஹேண்ட் பேக்கை எடுத்து அவர் ஓடும் வகையிலான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மிருணாள் தாகூர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது