நள்ளிரவில் வெளியாகும் ‘கனெக்ட்’ டிரெய்லர்... நயன்தாரா படத்தின் முக்கிய அறிவிப்பு !

connect
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகையான நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'மாயா'. இந்த படத்தன் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் உருவாகும் ‘கனெக்ட்’ படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தை ‘மாயா’ இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கி வருகிறார்.

connect

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்து வருகிறார். 

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story