தமிழில் வெப் தொடரில் நடிக்கும் நஸ்ரியா !
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. தனது க்யூட்டான நடிப்பால் எளிதாக அனைவரையும் கவரக்கூடிய அவர், ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘ராஜா ராணி’, ‘நைய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பிசியாக நடித்து வந்த நஸ்ரியா பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த அவர், முதலில் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெப் தொடர் ஒன்றில் நஸ்ரியா நடிக்கவுள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திலும், நடிகர் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். சூர்யா பிரதாப் இயக்கும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.