வானம் மெல்ல கீழறங்கி வந்த பெண் ஆனதே... வெள்ளை சேலையில் பளபளக்கும் நிகிலா விமல்!
1626936239102
நடிகை நிகிலா விமல் சேலையில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மலையாள நடிகை நிகிலா விமல் 'பாக்ய தேவதா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சசிகுமார் நடிப்பில் வெளியான .வெற்றிவேல். படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது ரங்கா என்ற படத்திலும் நிகிலா விமல் நடித்து வருகிறார். மலையாள நடிகையாக இருந்தாலும் நிகிலாவுக்கு தமிழிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது நிகிலா வெள்ளை நிற சேலையில் தேவதை போன்று காட்சி அளிக்கும் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.




