நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்... இணையத்தில் வேகமாக பரவும் தகவல் !

nikki galrani

 நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம், டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

nikki galrani

சினிமாவில் பிசியாக நடித்து வந்த நிக்கி கல்ராணி, கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ஆதியை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த மே மாதம் இவர்களது திருமணம் செய்துக் கொண்டனர். இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் தீயாய் பரவி வரும் தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதனால் சமூக வலைத்தளம் மூலம் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story