படுக்கையறை காட்சியால் நடிக்க மறுத்துவிட்டேன் - சூப்பர் ஹிட் படம் மிஸ்ஸானது குறித்து நடிகை பார்வதி ஓபன்டாக் !

parvathi nair

முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சி இருந்ததால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி. மலையாள‌ நடிகையான அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு உத்தமவில்லன், மாலைநேரத்து‌ மயக்கம், வாஸ்கோடகாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

parvathi nair

தற்போது தாமரைச்செல்வன் இயக்கத்தில் 'ரூபம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பார்வதி, அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க தனக்குத்தான் முதலில் அழைப்பு வந்ததாகவும், ஆனால் அந்த படத்தில் முத்தக்காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகள் இருந்ததால் நடிக்க மறுத்து விட்டேன். 

ஆனால் அந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. படத்தை பார்த்த பிறகு தான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என உணர்த்தேன். அந்தப் படம் ஒரு அழகான திரைப்படம். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும். அப்படி வாய்ப்பு வரும்போது அதை வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என்று பார்வதி தெரிவித்தார். 

 

 

Share this story