நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை பார்வதி

நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை பார்வதி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.   இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அன்னபூரணி திரைப்படம் தமிழில் வரவேற்பை பெற்றாலும், வட இந்தியாவில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அன்னபூரணி படத்தை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் தளத்தையும் தடை செய்யக்கோரி எதிர்ப்புகள் கிளம்பின.  கடும் கண்டனங்களை தொடர்ந்து, அன்னபூரணி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நீக்கியது. 

நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை பார்வதி

இந்நிலையில், படத்தை நீக்கியதற்கு பிரபல மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு ஆபத்தான முன் உதாரணம் என்றும் அவர் விமர்சித்து உள்ளார். 

Share this story