நடிகை பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சியா ?... பரபரப்பை ஏற்படுத்திய விமர்சகருக்கு வக்கீல் நோட்டீஸ் !

pooja hegde
நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றதாக விமர்சகர் உமைர் செய்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா சினிமாவில் வியக்கத்தகு நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே.  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு விஜய்யுடன் இணைந்து ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார். 

pooja hegde

தமிழை விட தெலுங்கில் பிசியான நடிகையாக இருந்தார். அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வந்தன. ஆனால் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 4 படங்களும் தோல்வியை தழுவின. இதனால் வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றதாகவும், அதை குடும்பத்தினர் கண்டறிந்து காப்பாற்றியதாகவும் பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து டுவீட் செய்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பூஜா ஹெக்டே தரப்பு உமைர் சந்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 

 

 

Share this story