ப்பபா... என்ன ஸ்டைலிஷ்... அசத்தல் லுக்கில் பூஜா ஹெக்டே !

pooja

 நடிகை பூஜா ஹெக்டேவின் ஸ்டைலான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

PoojaHegde

இந்தியா சினிமாவில் வியக்கத்தகு நடிகையாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே. அவரது அபார வளர்ச்சியை கண்டு திரையுலகமே அதிர்ந்து போயுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

PoojaHegde

அதன்பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது. குறுகிய காலத்தில் 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆச்சார்ய் உள்ளிள்ள படங்கள் வெளியாகின. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’  படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

PoojaHegde

தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார். ஆரஞ்சு நிற உடையில் கலக்கலாக உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

PoojaHegde

Share this story