'கூலி' பட பாடல் குறித்து மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே..!

'கூலி' படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள நிலையில், அந்த பாடல் குறித்து பகிரிந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த தகவலை அவர் உறுதி செய்தார். "கூலி படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனமாடி, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன்," என்று கூறிய பூஜா ஹெக்டே, ஆனால் அதே நேரத்தில், தமன்னாவின் ‘காவாலா’ பாடல் போல் இந்த பாடல் இருக்காது என்றும், இது முழுக்க முழுக்க Fun அடிப்படையில் இருக்கும் என்றும், "இந்த பாடலை நான் ரசித்து நடனம் ஆடினேன்," என்றும் தெரிவித்துள்ளார்.நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்', சூர்யாவின் 'ரெட்ரோ', ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.