'ஜன நாயகன்' படத்தில் நடிப்பதற்கான காரணத்தை கூறிய நடிகை பூஜா ஹெக்டே... என்ன சொன்னார் தெரியுமா..?

நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் நடிப்பதற்கான காரணத்தை நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் விஜய் நடிக்கும் 69 படமான ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் ஜனநாயகன் திரைப்படத்தை குறித்த சுவாரசிய விஷயங்களை பகிர்ந்தார்.
அதில் அவர் கூறியதாவது. " மக்கள் நானும் அவரும் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை மிகவும் விரும்பினர். அதைத்தொடர்ந்து அடுத்ததாக எப்பொழுது மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். மக்களின் அன்பிற்காக மட்டுமே இப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்திலும் எங்களை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். அதுமட்டும் இல்லாமல் இது விஜய் சாரின் கடைசி திரைப்படம் என கூறுகிறார்கள் ஆனால் அப்படி இருக்கக் கூடாது என ஆசைப்படுகிறேன். இந்த வாய்ப்பை தவறவிட்டால் என்னால் மீண்டும் பெற இயலுமா என்று தெரியவில்லை." என கூறினார்.