'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ஓராண்டு நிறைவு... ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே !

arabickuthu

'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் புதிய வீடியோ ஒன்றை நடிகை பூஜை வெளியிட்டுள்ளார். 

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம்‌ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் அனிரூத் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்து.‌ குறிப்பாக 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

arabickuthu

நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகிய இருவரும் இணைந்து பாடினர். ஜானி மாஸ்டர் நடன அமைப்பில் இந்த பாடல் உருவானது. இன்னுமும் இந்த பாடல் உலக அளவில் டிரெண்ட்டிங்கில் உள்ளது. இந்த பாடலை யூடியூப்பில் 39 கோடி  பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த பாடல் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற பாடலாக மாறியது. 

arabickuthu

இந்நிலையில் இந்தப் பாடல் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளத்தில் அரபிக் குத்து பாடலின் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை பூஜாவுக்கு அசத்தலாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


 

Share this story