கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா செய்வது ?.. பிரபல நடிகையின் செயலால் ஷாக்கான ரசிகர்கள் !

pooja ramachandran

கர்ப்பமான நேரத்தில் பிரபல நடிகை செய்த செயல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர் நடிகை பூஜா. விஷஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள அவர், மிஸ் கோயம்புத்தூர் பட்டம் பெற்றவர். விளம்பர மாடலாக இருந்த அவர், எஸ்.எஸ்.மியூசிக்கில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு ஏராளமான இருந்தனர். 

pooja ramachandran

இதையடுத்து வெள்ளித்திரையில் கால்தடம் பதித்த அவர், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ரா, லா, தொச்சாய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 

pooja ramachandran

இதற்கிடையே தொலைக்காட்சியில் பணிப்புரிந்தபோது கிரெக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கனை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் பூஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் நடிகை பூஜா ராமச்சந்திரன் வயிற்றில் குழந்தையுடன் தலைக்கீழாக நின்றப்படி யோகா செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கர்ப்பமாக நேரத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது நியாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 


 

Share this story