காபி குடிக்க கேட்கும் ஆண்களிடம் உஷாராக இருங்க - நடிகை பூனம் பாஜ்வா எச்சரிக்கை !

poonam bajwa

 சில ஆண்களிடம் உஷாராக இருங்க என நடிகை பூனம் பாஜ்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. பரத்தின் ‘சேவல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்பு இல்லை. அதனால் தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். 

poonam bajwa

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் காபி குடிக்க போலாமா ? என ஆண்கள் வெகுளியாக கேட்பார்கள். அதுபோன்ற ஆண்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்க. 

மேலும் பேசிய அவர், அது போன்ற பேசும் ஆண்களின் மனநிலை என்ன என்று எனக்கு தெரியும். காபிக்காக ஆண்கள் அழைப்பதில் ஏராளமான அர்த்தங்கள் இருக்கிறது. அதில் நிறைய பொருள் உள்ளன. அதனால் பெண்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 

 

Share this story