குழந்தையை பெற்றெடுத்த ‘நடிகை பூர்ணா’! - என்ன குழந்தை தெரியுமா!

photo

நடிகை பூர்ணா கர்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

photo

மலையாளம் மற்றும் தெலுங்கில் ஷாம்னா காசிம் என்ற அவரது இயற்பெயரில் அறியப்பட்டவர் நமக்கு பூர்ணாவாக பரிச்சயமானார். கோலிவுட்டில் ‘முனியான்டி விலங்கியல் மூன்றாம் அண்டு’ படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சவரக்கத்தி, தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த தலைவி படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்காக எடுக்கப்பட்டது. அதில் இவர் ஜெ-யின் நெருங்கியத் தோழியான சசிகலாவாக நடித்திருந்தார். இதற்காக அவர் பல மிரட்டல்களை சந்தித்தும் துணிச்சலாக கதாப்பாத்திரத்தில் நடித்து  அசத்தினார்.

photo

நடிகையாக ஜொலித்து வந்த பூர்ணா துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசி அலி என்பவரை காதலித்து பெற்றொர் முன்னிலையில்  கடந்த ஆண்டு  திருமணம் செய்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்டு தான் கர்பமாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். அடுத்தடுத்து இவரின் வலைகாப்பு புகைப்படங்களும் இணையத்தை வட்டமிட்டன.

photo

இந்த நிலையில் பூர்ணாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்த விஷயத்தை போட்டோபோட்டு சமூக வலைதள பக்கம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார். குட்நியூஸ் சொன்ன இந்த தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Share this story