47 வயதில் இரண்டாவது திருமணமா? – பிரபல நடிகை சொல்வது என்ன?

photo

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் நடித்து பிரபலமானவர் நடிகை பிரகதி, இவருக்கு தற்போது 47 வயதாகும் நிலையில் பிரபலம் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார் என செய்திகள் வெளியானது. அதற்கு பிரகதி பதில் கொடுத்துள்ளார்.

photo

தெலுங்கு நடிகையான பிரகதி தமிழில் கே. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தில் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

photoஇந்த நிலையில் 20 வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரகதி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில் தற்போது 47 வயதாகும் பிரகதி இரண்டாவது திருமணத்து தயார் என்றும் தன்னை காதலிப்பதாக கூறிய பிரபல தயாரிப்பாளருக்கு அவர் ஓகே கூறியதாகவும், விரைவில் அவர்களது திருமணம் நடக்க உள்ளது என்றும் இணையத்தில் செய்தி பரவியது. இந்த தகவலால் கடுப்பான பிரகதி ஆதாரம் இல்லாமல் இப்படி செய்தி வெளியிட்ட சேன்ல்களை வெளுத்து வாங்கி வருகிறார்.

Share this story