'லியோ' -ல் இணைந்தாரா பிரியா பவானி சங்கர்... இணையத்தில் தீயாய் வைரலாகும் புகைப்படங்கள் !

priya Bhavani Shankar

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

priya Bhavani Shankar

தமிழ் சினிமாவின் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். 'மேயாத மேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், 'பத்து தல', 'டிமான்ட்டி காலனி 2', 'ருத்ரன்', 'இந்தியன் 2' உள்ளிட்ட பல நடித்து முடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கில் நடித்து வரும் அவர், சமீபத்தில் வெளியான 'கல்யாணும் காமினியும்' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். 

priya Bhavani Shankar

இதுதவிர தலைப்பு வைக்காத தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மலைப்பிரதேசம் ஒன்றில் கேஷுவல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில் விஜய்யின் 'லியோ' படத்தில் அவர் இணைந்தாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

priya Bhavani Shankar

ஆனால் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எடுக்கப்பட்டது காஷ்மீர் அல்ல என்றும், அது இமாச்சலில் எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது ‌ தற்போது படப்பிடிப்பு இல்லாததால் ஜாலியாக ட்ரிப் ஒன்று அவர் சென்றுள்ளதாகவும், அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் 'லியோ' படத்தில் நடிப்பதாக வந்தது வெறும் வதந்தியே என்று பிரியா பவானி சங்கர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story