விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

vishal 34

 விஷாலின் 34வது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘மார்க் ஆண்டனி’ படத்தை முடித்துவிட்ட விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் அடுத்து நடித்து வருகிறார். ஏற்கனவே தாமிரப்பரணி, பூஜை ஆகிய அதிரடி படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது அனைவரின் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளது. 

vishal 34

விஷாலின் 34 வது படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபகாலமாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடிப்போட்டு நடித்து பிரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.  

 

Share this story