க்யூட் லுக்கில் ப்ரியங்கா அருள் மோகன்... வைரல் புகைப்படங்கள் !
தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ப்ரியங்கா அருள் மோகன். குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களான சிவகார்த்திகேயன், சூர்யா ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். கன்னடத்தில் வெளியான 'ஒந் கதே கெல்லா' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'கேங் லீடர்' படத்தில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தமிழ் சினிமா திரையுலகில் கால் பதித்த பிரியங்கா அருள் மோகன், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாக்டர்' படத்தில் நடித்தார். இதையடுத்து சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இந்த இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'டான்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடிப்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ப்ரியங்கா அருள் மோகன் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது.



