படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை ராஷி கன்னா..?

நடிகை ராஷி கன்னா தனது புதிய படத்தின் ஆக்ஷன் காட்சியில் காயம் அடைந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘மெட்ராஸ் கஃபே’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷி கண்ணா. தமிழில் 2018-ல் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்து ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சங்க தமிழன்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்தார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பில் ராஷி கண்ணாவுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சில கதாபாத்திரங்கள் உங்கள் உடல், மூச்சு, காயத்தை கேட்கும். நீங்கள் புயலாக இருக்கும்போது இடிக்கு பயப்பட தேவையில்லை. விரைவில்” என பதிவிட்டுள்ளார்.ரத்த காயங்களுடன் கூடிய ராஷி கண்ணாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எந்தப் படத்தின் படப்பிடிப்பில் ராஷி கண்ணாவுக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியவில்லை. படப்பிடிப்பின் சண்டைக்காட்சியின்போது இந்த ராஷி கண்ணாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.