புலித்தோலில் உடையணிந்த ராஷி கண்ணா.. கவனம் பெறும் புகைப்படங்கள் !

RaashiiKhanna

வித்தியாசமான உடையில் நடிகை ராஷி கண்ணா வெளியிட்டுள்ள போட்டோஷூட் கவனம் பெற்றுள்ளது. 

RaashiiKhanna

தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ராஷி கண்ணா. பாலிவுட் படம் மூலம் கவனம் பெற்ற அவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘மெட்ராஸ் கபே’ படத்தின் மூலம் நடிகையான அறிமுகமானார்.

RaashiiKhanna

இந்தியில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் சினிமாவிற்கு நுழைந்தார். அங்கு கொஞ்சம் வாய்ப்புகள் கிடைக்க அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படமே நல்ல ஓபனிங்கை தந்தது. அதன்பிறகு விஷாலுடன் அயோக்யா, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஆர்யாவுடன் அரண்மனை 3 என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

RaashiiKhanna

ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான கவர்ச்சி உடை போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. புலித்தோல் போன்று உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளது. 

Share this story