இனிமேல் ஃபயர் படத்தைப் போல கிளாமராக நடிக்க மாட்டேன் என நடிகை ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மேலும் மக்கள் மத்தியில் அன்பைப் பெற்றது மட்டுமில்லாமல், தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டவும் செய்தார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் இருந்து அசத்தவும் செய்தார். கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் இவரது விளையாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் தமிழில் வெளியான ஃபயர் படம் அவருக்கு பிரேக்காக அமைந்தது. அதாவது இந்த படத்தில் கிளாமராக நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்ததால், மிகவும் துணிந்து நடித்தார். ஆனால் இவர் ஏற்கனவே சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் ஹோம்லி கதாநாயகி என்ற பெயர் எடுத்திருந்த ரச்சிதாவுக்கு ஃபயர் படம் மொத்தமாக மாற்றிவிட்டிருந்தது. காரணம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் ஓவர் கிளாமராக நடித்திருந்தார். இவரது கிளாமரும் படம் ஓட முக்கிய காரணமாக கூறலாம்.
இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தற்போது மிகவும் முக்கியமான முடிவினை எடுத்துள்ளார். அதாவது, இனிமேல் ஃபயர் படத்தைப் போல கிளாமராக நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் திரைத்துறை வட்டாரத்தில் உலா வருகிறது. இதற்கு காரணம், ஃபயர் படத்தைப் பார்த்த பலரும் அதேபோல் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அணுகியுள்ளார்கள். ஆனால் இவரிடம் சென்ற அனைவரும் சென்ற வேகத்தில் திரும்பி வந்துள்ளனர். அதாவது, நான் மீண்டும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என மிகவும் உறுதியாக சொல்லி அணுப்பியுள்ளார். அதனால்தான் இந்த பேச்சு தற்போது தமிழ் திரைத்துறை முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.