நடிகை ராதிகாவின் 45 ஆண்டு திரைப் பயணம்... கேக் வெட்டி கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ் !

radhika

நடிகை ராதிகாவின் 45 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் ‘ரிவால்வர் ரீட்டா’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் ஆர்வமில்லாமலேயே சினிமாவிற்கு வந்த ராதிகா, தனது அசாத்திய திறமையால் நடிப்பின் உச்சத்திற்கே சென்றார். 

radhika

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்தியாவின் முக்கிய மொழிகளில் அனைத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பன்முக திறமைக் கொண்ட நபராக இருக்கும் ராதிகா, நடிப்பை தாண்டி தயாரிப்பு, இயக்கம் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சினிமாவை தாண்டி சீரியலிலும் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றார். 

radhika

இந்நிலையில் சினிமாவிற்கு வந்த நடிகை ராதிகா 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை தனது குடும்பத்துடன் நடிகை ராதிகா கொண்டாடி வருகிறார். அதோடு தான் நடித்து வரும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

 

Share this story