இந்த வயதிலும் குறையாத காதல்... சரத்குமாருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்ன ராதிகா !

sarathkumar

நடிகர் சரத்குமார் பிறந்தநாளையொட்டி அவரது ராதிகா முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக ஜொலித்தவர் நடிகர் சரத்குமார். பத்திரிகையாளர், ஜிம் பயிற்சியாளர், நடிகர் என அடுத்தடுத்து தனது கெரியதை உயர்த்தினார். பன்முக திறமை கொண்ட சரத்குமார், ரஜினி, கமல், விஜயகாந்திற்கு நிகராக சினிமாவில் வலம் வந்தவர். புலன் விசாரணை, சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, சூர்ய வம்சம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 

sarathkumar

சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரு மகன்கள் உள்ளனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000-ஆம் ஆண்டு சாயாதேவியை அவர் பிரிந்தார். பின்னர் நடிகை ராதிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துக்கொண்டார். சரத்குமார் - ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். 

sarathkumar

இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி வீட்டில் மனைவி ராதிகாவுடன் சேர்ந்து சரத்குமார் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது முத்தம் கொடுத்து தனது பிறந்தநாள் வாழ்த்தை ராதிகா தெரிவித்தார். இந்த பிறந்தநாள் கொண்ட்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.‌

 

Share this story