‘பிக்பாஸில் என்ன இருக்கிறது….”- ராதிகா ஓபன் டாக்.

photo

பிரபல நடிகை ராதிகா சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன இருக்கிறது அதை ஏன் இப்படி பார்க்கிறீர்கள் என கோபமடைந்துள்ளார்.

photo

கதாநாயகி, அம்மா வேடம், குணசித்திர கதாப்பாத்திரம் என வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கிவரும் ராதிகா.  சின்னத்திரையில் சித்தி, செல்லம், அண்ணாமலை என பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கிழக்கு வாசல் தொடரை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பாக நடந்த உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு விழாவில் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது அங்கு நிறைய விஷயங்கள் குறித்த பேசிய அவர் பிக்பஆச் நிகழ்ச்சி குறித்தும் பேசியுள்ளார். அதாவது “பிக்பாஸில் என்ன இருக்கிறது… ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இருக்கிறது. இது தேவையற்றது. அதேப்போல இளம் பெண்கள் தொடர்ந்து போனிலேயே மூழ்கி இருக்காதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story