தவறாக பயன்படுத்தப்படும் ‘காதல்’ என்ற வார்த்தை - நடிகை ரகுல் ப்ரீத் சிங் பேச்சால் சலசலப்பு !

rakul preet singh

 காதல் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். 

இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ள அவர், இந்தியிலும் பிசியாக நடித்து வருகிறார். 

rakul preet singh

இந்நிலையில் பேட்டி ஒன்றை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அளித்துள்ளார். அதில், ஒரு உறவின் ஒப்பந்தத்தை முறிப்பது பொய் என்று நினைக்கிறேன். நெருக்கமான உறவில் பேசமுடியாத விஷயம் என்று எதுவுமே இல்லை. நண்பர்களாக இருக்கும் உறவை நம்புகிறோம். அந்த உறவில் மறைப்பதற்கு பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமும் இல்லை. தவறு செய்யாலும் மனம் விட்டு பேசிக்கொள்வோம். 

காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலான பேசி ஏமாற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார். இந்த கருத்தை கேட்ட ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங் காதலில் பிரச்சனையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

Share this story