விஜயகாந்த் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா

விஜயகாந்த் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

விஜயகாந்த் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா

அந்த வகையில் நடிகை ரம்பா, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர், அவரது இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல்  தெரிவித்தார். 
 

Share this story