'காவாலா' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'ரம்யா கிருஷ்ணன்'- வைரல் வீடியோ.

photo

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜெய்லர்’. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அதிலும் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலாக வெளியான ‘காவாலா’ பாடலும் அதற்கு தமன்னா ஆடிய ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் பலரும் தமன்னா ஆடிய அந்த ஸ்டெப்பை ஆடி ரீல்ஸ் செய்து தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து  நடிகை ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் உட்பட மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் டிரைலர் அல்லது டீசர் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர் ஆனால் எதுவும் வெளியாகாமலிருந்தது  ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் டீசர் மற்றும் டிரைலரை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

Share this story