‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்திற்கு பிரதமர் பாராட்டு ; நடிகை ராஷி கண்ணா நெகிழ்ச்சி

rashi kanna

12த் ஃபெயில் படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த விக்ராந்த் மாஸ்ஸி புதிதாக நடித்துள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’.  தீரஜ் சர்ணா இயக்கியுள்ள இப்படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் வெளியான இப்படம் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்படத்தை பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பார்த்திருந்த நிலையில் அதில் படக்குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும் அந்த பதிவில், “எங்கள் இதயத்திலிருந்து அர்ப்பணித்த இந்த சின்னப் படம், நமது பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையாகவே கனவில் இருப்பது போல உணர்கிறேன். லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கும் ஒருவரிடமிருந்து கிடைத்துள்ள பாராட்டு உண்மையிலேயே பணிவானது. நல்ல படைப்புக்கு இது ஒரு சான்று” என்று கூறியுள்ளார்.

Share this story