க்யூட் லுக்கில் நடிகை ராஷ்மிகா.. வாயை பிளக்கும் ரசிகர்கள் !

rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா, க்யூட் லுக் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

rashmika

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கன்னடத்தில் போதிய வாய்ப்பில்லாததால் தெலுங்கு பக்கம் வந்த ராஷ்மிகா, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட், நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. 

rashmika

தெலுங்கில் மட்டும் நடித்த வந்த ராஷ்மிகா, தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.  தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் ‘சுல்தான்’ படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவ்வெவ்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.  அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டி சாதனை படைத்தார். 

rashmika

இந்நிலையில் க்யூட்டான இருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். 

rashmika

Share this story