80 லட்சம் ஆட்டையை போட்ட மேனேஜர்... அதிர்ச்சியில் நடிகை ராஷ்மிகா !

rashmika mandana

நடிகை ராஷ்மிகாவை அவரது மேனேஜர் 80 லட்சம் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறுகிய காலத்தில் பான் இந்தியா நடிகை அளவிற்கு உயர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு படங்கள் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்திற்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

rashmika mandana

அதனால் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.  தெலுங்கை தவிர தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இந்தியில் 'அனிமல்' படத்தில் ரன்பீர்‌ கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோன்று தெலுங்கில் 'புஷ்பா 2', தமிழில் ரெயின்போ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

 இந்நிலையில் தன்னிடம்‌ நீண்ட நாட்களாக மனேஜேராக இருப்பவர் 80 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனால் உடனடியாக அவரை மேனேஜய் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாத தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story